உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காவலர் குடியிருப்பில் அடாவடி: இன்ஸ்., சஸ்பெண்ட்

காவலர் குடியிருப்பில் அடாவடி: இன்ஸ்., சஸ்பெண்ட்

சென்னை, பொது இடத்தை ஆக்கி ரமித்ததை தட்டிக்கேட்டதால், எஸ்.ஐ.,க்கு அரசு வழங்கிய வாகனங்களை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:சென்னை, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயலட்சுமி, 58. அவரின் கணவர் சவுந்தரராஜன், சென்னை புதுப்பேட்டையில் உள்ள, ஆயுதப்படையில் துணை கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவர்கள், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள, காவலர் குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வருகின்றனர். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்.ஐ., இளையராஜா, 42. அவர், சென்னை மாநகர போலீசில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிகிறார்.வீட்டைச்சுற்றி காலியாக உள்ள பொது இடத்தில், 1,000 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, ஜெயலட்சுமி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதில், வாகன நிறுத்தும் இடத்தையும் கட்டி இருப்பதாக கூறப் படுகிறது.இதன் காரணமாக, ஜெயலட்சுமி மற்றும் இளையராஜா குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, இளையராஜா, சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தை காலி செய்யஉத்தரவிட்டுள்ளது.இதனால், ஆத்திர மடைந்த ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர், இளையராஜாவுக்கு அரசு வழங்கிய இரு சக்கர வாகனத்தையும், அவரின் மனைவியின் இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அவற்றை சரிசெய்து மீண்டும் அதே இடத்தில், இளையராஜா மற்றும்அவரின் மனைவிஆகியோர் நிறுத்தி உள்ளனர். மீண்டும் அந்தவாகனங்களை, ஜெயலட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர் சேதப்படுத்திஉள்ளனர். இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசில் இளையராஜா அளித்த புகாரின்படி, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஜெயலட்சுமியை 'சஸ்பெண்ட்' செய்து, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி