உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கிடப்பில் உள்ள பட்டா மாற்றம் குறித்து விசாரித்து நடவடிக்கை: சப் - கலெக்டர்

 கிடப்பில் உள்ள பட்டா மாற்றம் குறித்து விசாரித்து நடவடிக்கை: சப் - கலெக்டர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில், பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு செய்வது உள்ளிட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் இருப்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சப் - கலெக்டர் ஆஷிக் அலி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவில், பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு செய்வது போன்ற பட்டா தொடர்பான மனுக்கள் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கம். பட்டா தொடர்பான மனுக்கள் மீதான முடிவுகளை, 30 நாட்களில் தாசில்தார் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் பட்டா தொடர்பான மனுக்கள் பல கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பதிவு அலுவலகத்தில் சொத்து தொடர்பான பதிவு செய்யும்போது, பட்டா மாற்றத்திற்கும் கட்டணம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் தாலுகா அலுவலகத்தில் பட்டா பெறுவதற்கு அலைகழிக்கப்படுவது அதிகரிக்கிறது. காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா தொடர்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலியிடம் கேட்டபோது, ''பட்டா தொடர்பான மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மனுக்கள் தாமதமாவது என்றால், ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கும். நீண்ட நாட்கள் நிலுவையில் எத்தனை மனுக்கள் உள்ளது என, விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை