உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இஸ்கான் பாதயாத்திரை குழுவினர் காஞ்சி கோவில்களில் தரிசனம்

இஸ்கான் பாதயாத்திரை குழுவினர் காஞ்சி கோவில்களில் தரிசனம்

காஞ்சிபுரம், இஸ்கான் பாதயாத்திரைக் குழுவினர் கடந்த, ஜன., 23ம் தேதி, திருநெல்வேலியிருந்து புறப்பட்டு மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி, அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் வந்தனர். இக்குழுவினர், தினமும் காலையில் 9:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை காஞ்சிபுரத்தில் பாதயாத்திரையாக சென்று நகரில் உள்ள கோவில்களில் தரினம் செய்து வருகின்றனர்.கோவில்களில் முன்பாக பஜனை பாடல்கள் பாடி பக்தர்களையும் மகிழ்வித்து வருவதுடன் ராமாயணம் மற்றும் பகவத்கீதையின் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்து கூறுகிறனர்.இக்குழுவினருடன் கிருஷ்ணரின் திருஉருவச்சிலைகள் உள்ள ரதமும் வலம் வருகிறது.இக்குழுவின் தலைவர் சேவானந்த தாஸ் கூறியதாவது:காஞ்சிபுரத்தில் பாதயாத்திரையை நிறைவு செய்து, கும்பகோணம் வழியாக, ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக செல்கிறோம். செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மண்டபங்கள் ஆகியனவற்றில் தங்கிக் கொள்வோம்.செல்லும் வழியில் மக்கள் தரக்கூடிய அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டு நாங்களே சமைத்துக் கொண்டும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறோம்.எங்களின் பாதயாத்திரைக்கான நோக்கம் மக்கள் பகவத்கீதையின் கருத்துக்களை தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை