உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அவசர சிகிச்சை பிரிவுக்கு இடம் தேர்வு ரூ.4.50 கோடியில் அமைக்க முடிவு

அவசர சிகிச்சை பிரிவுக்கு இடம் தேர்வு ரூ.4.50 கோடியில் அமைக்க முடிவு

வாலாஜாபாத் : வாலாஜாபாத் அரசு பொது மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான வார்டுகள் அமைய உள்ளன. இதற்கான இடவசதி குறித்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம்-, செங்கல்பட்டு சாலையின் மைய பகுதியில், வாலாஜாபாத் உள்ளது. இங்குள்ள வட்டார அரசு பொது மருத்துவமனையில், தினமும், 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 60 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும், 20 பேர் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை எனில், அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.இதனால், காலவிரயம் ஏற்படுவதோடு, நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதை தடுக்க வாலாஜாபாதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர்.இதை தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதார அமைப்புசீர்திருத்த திட்டத்தின் கீழ், 4.50 கோடி ரூபாய்செலவில், விபத்து மற்றும்அவசர சிகிச்சைக்கான வார்டு புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக, வாலாஜாபாத்அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, இரண்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட உள்ளன. இந்த பணிகளை காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூடுதல்கட்டடம் அமையவுள்ள பகுதி குறித்து, உத்திர மேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,சுந்தர் ஆய்வு செய்தார். மேலும், இடவசதிபோன்றவை குறித்துஅதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகத்தில், பயன்பாடற்ற பழைய கட்டடங்களை இடித்து அகற்றி, அந்த இடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இதில், காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர் சுந்தரம், வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவ அலுவலர் விமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து, வாலாஜாபாத் அரசு மருத்துவமனை அதிகாரி கூறியதாவது: வாலாஜாபாதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைகள் அளிப்பதற்கானவார்டுகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதற்காக, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சி.டி., ஸ்கேன், செயற்கை சுவாச கருவி, எக்ஸ்-ரே, ஸ்கேன் கருவி மற்றும் கூடுதல் மருத்துவர், உதவியாளர்கள் நியமிக்கப் பட்டு, மருத்துவமனை மேம்படுத்தப்படஉள்ளது.இதன் வாயிலாக விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட அவசர நோய்களுக்கு, இங்கு சிகிச்சை அளிக்க முடியும். இடம் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அடுத்த பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வாலாஜாபாத் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததால், காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். விபத்து, மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, உடனடி சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது. தற்போது, அவசர சிகிச்சை பிரிவு அமைவது, உயிரிழப்புகளை குறைக்க பெரும் உதவியாக இருக்கும்.

- இ.சீனுவாசன் வாலாஜாபாத்

வாலாஜாபாத்தில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், சுற்றி உள்ள 30 கிராமங்களுக்கு வாலாஜாபாத் மையப்பகுதியாக உள்ளது. விபத்து மற்றும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி என, அவசர சிகிச்சைக்கு, தற்போது அமைய உள்ள தீவிர சிகிச்சை வார்டு மூலம் தீர்வு கிடைத்தால் உதவியாக இருக்கும்.

- வெ.மகேந்திரவர்மன் வாலாஜாபாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை