| ADDED : மார் 14, 2024 11:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஆறாவது வார்ஷிக ஆராதனை மஹோத்சவம் வரும் 22ல், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடைபெறுகிறது.இதையொட்டி, வரும் 20 - 22 வரை என, மூன்று நாட்கள், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடைபெறும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்தில் வேதபாராயணம், வித்வத்ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீதாஞ்சலி நடக்கிறது.வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவ தினமான, வரும் 22ல், காலை 7:00 மணிக்கு ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், சுவாமிகளின் பிருந்தாவனத்தில் அபிஷேகம் நடைபெறுகிறது.காலை 9:00 மணி முதல், பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடக்கிறது. வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, மடத்தின் நிர்வாகி கீர்த்திவாசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.