உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளம்பெண் மர்ம மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் மர்ம மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை

மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் அருகே, வயல்வெளி கிணற்றில், இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.திருக்கழுக்குன்றம் அடுத்த நாவலூர் கிராமத்தில், பொன்விளைந்தகளத்தூர் சாலையில் உள்ள வயல்வெளி கிணற்றில், நேற்று காலை 7 மணி க்கு, இளம்பெண் இறந்து கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள், திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், உடலை மீட்டு, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் விசாரணையில், இறந்த பெண், திருக்கழுக்குன்றம், சங்குமேட்டுத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி கங்காதேவி, 22, என்பது தெரிய வந்தது. திருமணமாகி மூன்று ஆண்டுகள õன இவருக்கு, ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ