மேலும் செய்திகள்
காஞ்சியில் விஜய் நிகழ்ச்சி அனுமதி கேட்டு மனு
2 minutes ago
மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
5 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு மாத்தம்மன், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அருந்ததியர் நகரில் மாத்தம்மன், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இரு கோவில்களையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, இரு கோவில்களிலும் திருப்பணி செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் ஓத, வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். காலை 10:30 மணிக்கு மஹா அபிஷேகமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
2 minutes ago
5 minutes ago