உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் சாலை தெருவில் இருந்து, ஜெ.ஜெ., நகர் வழியாக, கீழம்பி ஆட்டோ நகருக்கு செல்லும் சாலை உள்ளது.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலை பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சிறுகாவேரிபாக்கத்தில் இருந்து, கீழம்பி செல்லும் சாலையில், மழையால் சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.சரவணன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை