மேலும் செய்திகள்
மழையால் சேதமான சாலை நெ.சா.துறையினர் சீரமைப்பு
03-Dec-2024
சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி சாலை வழியாக பள்ளி கல்லுாரி மாணவியர் மற்றும் நாகலுாத்து, தேனம்பாக்கம், தும்பவனம், டெம்பிள் சிட்டி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், குமார் தெரு சந்திப்பில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எல்.அன்பழகன், காஞ்சிபுரம்.
03-Dec-2024