உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்டவாளத்தில் விரிசல் மின்சார ரயில் தாமதம்

தண்டவாளத்தில் விரிசல் மின்சார ரயில் தாமதம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மின்சார ரயில், தாமதமாக சென்றது. காஞ்சிபுரத்திலிருந்து, அரக்கோணம் செல்லும் சாலையில், திருமால்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் சென்னை பீச்சுக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு, பீச் செல்லும் மின்சார ரயில் புறப்பட்டபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டார். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே பொறியாளர்கள் விரைந்து வந்து, தண்டவாள விரிசலை சரி செய்தனர். ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்