உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் இருவர் பலி

சாலை விபத்தில் இருவர் பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்,62. இவர், நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு, காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே, சாலையைக் கடந்தார்.அப்போது, அவ்வழியே சென்ற தனியார் பஸ், அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்தவரை, அருகிலிருந்தோர் சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி, அவர் பரிதாபமாக இறந்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே, கடந்த 11ம் தேதி, பகல் 2.30 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்க நபர் சாலையைக் கடந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ஆட்டோ, அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்தவரை, அருகிலிருந்தோர் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார். இவ்விபத்துகள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ