உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல்போன் தவணையை கட்டாததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்

மொபைல்போன் தவணையை கட்டாததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, காரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப். அ.தி.மு.க.,வில் கிளை செயலராக உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள்.இதில், மூத்த மகனான ஆனந்த்,31. பட்டப் படிப்பு முடித்துவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன லைெசன்ஸ், எப்.சி.,புதுப்பித்தல் போன்ற வேலைகளை, 'கமிஷன்' அடிப்படையில் செய்து வந்தார்.இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு, வீட்டிலிருந்து புறப்பட்ட ஆனந்த், நேற்று முன்தினம் காலை, காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.இந்நிலையில், அவரதுநண்பர்கள் நான்கு பேரை பிடித்து விசாரித்ததில், ஆனந்தை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து, பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குணரஞ்சன், 29, ஓரிக்கையைச் சேர்ந்த கவுதமன், 35, செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 23, கூரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபுதேவா, 32, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட ஆனந்த் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நண்பர்கள். இதில், ஆனந்துக்கு புதிய மொபைல்போன் ஒன்றை கவுதமன், மாத தவணையில் வாங்கி கொடுத்துள்ளார்.மாத தவணையை ஆனந்த் முறையாக செலுத்தாததால், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில், 7ம் தேதி இரவு, அனைவரும் மது அருந்திய நிலையில், மொபைல்போன் பிரச்னை மற்றும் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனாலேயே, நான்கு பேரும் சேர்ந்து, ஆனந்தை கொலை செய்துள்ளனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி