உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதையில் லாரிக்கு தீ வைத்த கொருக்குப்பேட்டை சிறுவன்

போதையில் லாரிக்கு தீ வைத்த கொருக்குப்பேட்டை சிறுவன்

கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை, 44. கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே நிறுத்தப்பட்டிருந்த இவரது மினி லாரி, கொழுந்து விட்டெரிந்தது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.விபத்தில், வாகனத்தின் முன்பகுதி எரிந்து நாசமானது. சம்பவ இடத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து, சப் - இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரிக்க முயன்றார். அவர்கள் பயந்து ஓட முயன்றனர். அதில் சிறுவனை பிடித்த நிலையில், மற்றொருவர் தப்பி ஓடினார். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், மதுபோதையில், அதே பகுதியில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடி, மினி லாரிக்கு தீ வைத்ததும் தெரிய வந்தது.ஆர்.கே.நகர் போலீசார் சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை