உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நுாலக கட்டடத்தில் இயங்கும் கோயம்பாக்கம் ரேஷன் கடை

நுாலக கட்டடத்தில் இயங்கும் கோயம்பாக்கம் ரேஷன் கடை

காஞ்சிபுரம்,நுாலக கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையால், நுாலகத்தை செயல்படுத்த முடியவில்லை என்று புலம்பல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் ஊராட்சியில், கோயம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நுாலக கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டு, புத்தகங்களும் உள்ளன. நுாலகரை நியமிக்காததால், நுாலகம் செயல்படவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சேதமடைந்த சமுதாயகூட கட்டடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடையை நுாலக கட்டடத்தில் வைத்து இயக்கி வருகின்றனர்.இந்த கட்டடத்தில், அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கூட்டுறவு துறையினர் இருப்பு வைத்து வினியோகம் செய்து வருகின்றனர்.இந்த நுாலக கட்டடத்தில், போதிய நிழற்கூரை வசதி இல்லாததால், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டி உள்ளது.கோயம்பாக்கம் நுாலக கட்டடத்திற்கு, நிழற்கூரை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, ரேஷன் கடைக்கு வருவோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:சேதமடைந்த சமுதாயகூட கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கேட்டு, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி.,யிடம் நிதி கேட்டுள்ளோம். விரைவில் ஒதுக்கீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை