உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குமரக்கோட்டம் முருகன் வெள்ளி தேரில் உலா

குமரக்கோட்டம் முருகன் வெள்ளி தேரில் உலா

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் குமரக் கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியான, தை பொங்கல் தினத்தன்று மட்டும் வள்ளி, தெய்வானையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருவார்.அதன்படி தை பொங்கல் தினமான நேற்று முன்தினம் காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. மாலையில் வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடந்தது.இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.பல்வேறு பூஜைகளுக்குப்பின், இரவு 7:30 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முருகப்பெருமான் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை