மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
08-Apr-2025
செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடில் செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் கோவில் உள்ளது. இதில், செல்லியம்மன், மாரியம்மன் கோவில்களுக்கு, புதிதாக கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த மாதம் 30ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜையும், மாலை 6:-00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடும், தொடர்ந்து செல்லியம்மன், மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கும், 10:00 மணிக்கு செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.காலை 11:00 மணிக்கு மஹா அபிேஷகமும், மாலை 6:00 மணிக்கு செல்லியம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஆக்கூர் பச்சையம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடந்தது.. விழாவிற்கான ஏற்பாட்டை செவிலிமேடு கிராமத்தினர் செய்திருந்தனர்.
08-Apr-2025