உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிலாளர் நலவாரிய சர்வர் பழுது ஆவணங்கள் சமர்ப்பிக்க அழைப்பு

தொழிலாளர் நலவாரிய சர்வர் பழுது ஆவணங்கள் சமர்ப்பிக்க அழைப்பு

காஞ்சிபுரம்:தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து கேட்பு மனுக்களும் தொழிலாளர் துறை இணையதளம் வாயிலாக பெறப்படுகிறது.கடந்த 2023ம் ஆண்டு, டிச., 2ம் தேதிக்கு முன், தொழிலாளர்களால் விண்ணப்பிக்கப்பட்ட பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களின் ஆவணங்கள், சர்வர் பழுது ஏற்பட்டதன் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, தொழிலாளர் துறை இணையதளத்தில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யும் வகையில், காஞ்சிபுரம், ஓரிக்கை அண்ணா நெசவாளர் குடியிருப்பில் உள்ள, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில், பிப்., 16 முதல், ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு, காஞ்சிபுரம் மாவட்ட, சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர் உதவி ஆணையர், லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை