உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கிய முருகன்

சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கிய முருகன்

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், இன்று நடக்கவுள்ள சூரசம்ஹாரத்திற்கு, வல்லம் ஸ்ரீ சைனாம்பிக்கை அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதில், நாள்தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் முருகபெருமான் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அதன்படி ஐந்தாம் நாளான நேற்று, உற்சவர் முருகபெருமான் மஞ்சள் சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, வல்லம் கிராத்தில் உள்ள சைனாம்பிகை சடையீஸ்வரர் கோவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 க்கு சடையீஸ்வரர் கோவில் முருகபெருமான் எழுந்தருளி, சைனாம்பிகை உடனாகிய அம்பாளிடம், சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கினார். இன்று, வல்லக்கோட்டை முருகன் கோவில் வடக்கு மாட வீதியில், மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை