உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மளிகை கடையில் மது விற்றவர் கைது

மளிகை கடையில் மது விற்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 54, இவரது கணவர் கருணாகரன், 60, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. புவனேஸ்வரி அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இந்த நிலையில், புவனேஸ்வரி மளிகை கடையில் மதுபாட்டில்களை விற்பதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று, புவனேஸ்வரியின் மளிகை கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 600 மதுபாட்டிகள், 40 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், புவனேஸ்வரியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை