காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை
காஞ்சிபுரம்,:தமிழகத்தில் திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மரவள்ளிக்கிழங்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, புதுச்சேரியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் நடைபாதை கடைகளில், மரவள்ளி கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:புதுச்சேரியில், 10 மாதத்திற்கு முன் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு தற்போது அறுவடை செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நாட்களில் கிலோ 60 - -70 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உள்ளதால், கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். வரத்து அதிகரித்தால், விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.