உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்திரமேரூர் தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்திரமேரூர் தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து

காஞ்சிபுரம்:தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், சிறந்த பேரூராட்சிக்கான விருது பெற்ற உத்திரமேரூர் தி.மு.க., பேரூராட்சி தலைவர் பொன் சசிகுமார், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார். சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், சிறப்பாக செயல்பட்ட பேரூராட்சிகளுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்று வழங்கி கவுரவித்தார். இதில், தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சியாக, உத்திரமேரூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதையொட்டி. உத்திரமேரூர் பேரூராட்சி தி.மு.க., தலைவர் பொன் சசிகுமாருக்கு. தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சி எனவும், முதலிடத்தை பெற்றதை தொடர்ந்து, உத்திரமேரூர் தி.மு.க., பேரூராட்சி தலைவர் பொன் சசிகுமார், செயல் அலுவலர் பழனிகுமார் ஆகியோர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை