காஞ்சியில் 7 துணை மின் நிலையம் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
சென்னை:''காஞ்சிபுரத்தில் பட்டு பூங்கா பகுதியில், துணை மின் நிலையம் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:* தி.மு.க., - எழிலரசன்: காஞ்சிபுரம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, திருவீதிபள்ளம், திருப்பருத்திகுன்றம் அம்பேத்கர் நகர், செவிலிமேடு பகுதிகளில், குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளது. கூடுதல் மின்மாற்றிகள் அமைத்து தரப்படுமா?* அமைச்சர் செந்தில் பாலாஜி: காஞ்சிபுரத்தில் கூடுதலாக, 10 மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. உறுப்பினர் கூறிய பகுதிகளில், தேவை இருந்தால் புதிய மின்மாற்றி அமைக்கப்படும்.* எழிலரசன்: காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூர் கிராமத்தில், அண்ணா பட்டுப் பூங்கா, தனியார் பங்களிப்புடன், கைத்தறி பட்டு செநவு தொழில் கூடமாக மாறி உள்ளது. அங்கு மின் தேவை அதிகமாக உள்ளது. அருகில் குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இடம் உள்ளது.* அமைச்சர் செந்தில் பாலாஜி: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மின் தேவையை கருத்தில் வைத்து, 7 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க, ஒரு துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த, முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார்.மேலும், பட்டு பூங்கா பகுதியில், ஒரு துணை மின் நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அமைக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.