உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டிற்கு வராமலேயே 7 ஆண்டுகளாக நவீன கழிப்பறை வீண்

பயன்பாட்டிற்கு வராமலேயே 7 ஆண்டுகளாக நவீன கழிப்பறை வீண்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் ஏழு ஆண்டுகளுக்கு முன், அமைக்கப்பட்ட 'இ- -- டாய்லெட்' என்ற நவீன கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி வருகிறது. பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, வடக்கு ராஜகோபுரம் அருகில் 'இ - டாய்லெட்' என்ற நவீன கழிப்பறை, 2018ல் அமைக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமலேயே ஏழு ஆண்டுகளாக வீணாகி வருகிறது. எனவே, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் வடக்கு ராஜ கோபுரம் அருகில் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகும் நவீன கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் வடக்கு கோபுரம் அருகில் சுற்றுலாப் பயணியருக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை