உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத், போஜக்கார குறுக்குத் தெருவில் சிறுபாலத்திற்கு தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில் போஜக்காரத் தெரு உள்ளது. இத்தெருவில் இருந்து, பி.எஸ்.என்.எல்., அலுவலக தெருவிற்கு செல்லும் குறுக்குத் தெரு உள்ளது. இத்தெருவின் துவக்க பகுதியில் கழிவுநீர் கால்வாய் இணைப்பாக அயோத்திதாச பண்டிதர் நிதியின் கீழ் கடந்த மார்ச் மாதம் சிறுபாலம் கட்டப்பட்டது. பணி நிறைவு பெற்றும் சிறுபாலத்தின் இருபுறமும் இதுவரை தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால், இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இந்த சிறுபாலத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை