உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள போந்துார், வல்லம், வல்லக்கோட்டை, மாத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகின்றனர். ஆனால், அந்த மாடுகளை அவர்கள், வீடுகளில் கட்டி பராமரிப்பது இல்லை. மாறாக, நெடுஞ்சாலையில் திரிய விடுகின்றனர். அவை கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றி திரிவதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். மாடுகள் திடீரென சாலையில் தறிகெட்டு ஓடுவதாலும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ