| ADDED : பிப் 25, 2024 02:23 AM
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளத்தில் இருந்து, காப்புக்காடு வழியாக மருதம் செல்லும் சாலை உள்ளது.மலையாங்குளம், படூர், காட்டாங்குளம், ஆனம்பாக்கம் சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமத்தினர் இச்சாலையைபயன்படுத்தி உத்திரமேரூர் - திருப்புலிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவு உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாத இச்சாலையில், வளைவுப் பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே, ஆபத்தான வளைவு பகுதிகளில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.