மேலும் செய்திகள்
உத்திரமேரூர் சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
5 minutes ago
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
10 minutes ago
பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
18 minutes ago
அய்யப்பனுக்கு மலர் பூஜை
21 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை கிராமத்தில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள குருவிமலை கிராமம் வழியாக, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகரல், உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், குருவிமலை அம்மா பூங்கா அருகில், சாலையோரம் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி சாலையோரபள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, குருவிமலை கிராமத்தில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மண் கொட்டி சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
5 minutes ago
10 minutes ago
18 minutes ago
21 minutes ago