உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

 நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலை, மானாம்பதி சாலை, எண்டத்தூர் சாலை, பஜார் வீதி ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இச்சாலைகளை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர், தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சாலைகளில் சமீப நாட்களாக, நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அப்போது, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழியை விடாமல், நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்தி செல்கின்றன. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, அப்பகுதியைச் சேர்ந்தோர் பல்வேறு வேலை நிமித்தம் காரணமாக சாலைகளில் நடந்து செல்லும்போது சிறுவர், முதியோரை நாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றன. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, உத்திரமேரூரில் நாய்களின் தொல்லையை கட்டுப் படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்