| ADDED : நவ 21, 2025 01:33 AM
ஸ்ரீபெரும்புதுார்: சாலமங்கலம் நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. படப்பை மற்றும் சாலமங்கலத்தில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பை, உணவு கழிவு, இறைச்சி கழிவுகள், முடி திருத்த கடைக்காரர்கள் முடியை மூட்டைகளில் கட்டி இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். இதனால், இப்பகுதியில் வீசும் கடும் துர்நாற்றத்தால், வாகனங்களில் செல்பவர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுத்து, மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.