உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவ கல்லுாரி மாணவர் விடுதியில் மர்ம மரணம்

மருத்துவ கல்லுாரி மாணவர் விடுதியில் மர்ம மரணம்

சென்னை:கேரளா, எர்ணாவூர், கொத்தமங்களத்தைச் சேர்ந்தவர் அஞ்ஜித் பால், 25; ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வந்தார்.இவர், ஏழுகிணறு பகுதியிலுள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தார்.நேற்று காலை, இவர் தங்கியிருந்த அறையின் கதவை, அவரது நண்பர் அக் ஷய் வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை. கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்தோர் உதவியுடன் திறந்து பார்த்த போது, அஞ்ஜித் பால் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.உடனே அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று அஞ்ஜித் பால் உயிரிழந்தார். ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், அஞ்ஜித் பாலின் அறையில் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்துள்ளன. போதை மாத்திரை சாப்பிட்டு மயங்கினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்