உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை, குடிநீர், இருக்கை வசதி இல்லாத நீர்வள்ளூர் மின் வாரிய அலுவலகம்

சாலை, குடிநீர், இருக்கை வசதி இல்லாத நீர்வள்ளூர் மின் வாரிய அலுவலகம்

நீர்வள்ளூர், நீர்வள்ளூர் மின்வாரிய அலுவலகத்தில், சாலை, குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, மின் நுகர்வோர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சின்னையன்சத்திரம் கிராமம் உள்ளது. இங்கு, நீர்வள்ளூர் துணை மின் நிலையத்திற்குரிய மின் வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த மின் வாரிய அலுவலகத்திற்கு வரும் மின் நுகர்வோர் செல்ல போதிய கான்கிரீட் சாலை; மின் கட்டணம் செலுத்த வருவோருக்கு அமர இருக்கை இல்லாமல் உள்ளது. மேலும், குடிநீர் வசதியும் இல்லை. குறிப்பாக, இரவு நேரக் காவலர் மற்றும் இரவு நேர மின் வாரிய ஊழியர்கள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் மின் சப்ளை துண்டிப்பு ஏற்பட்டால், பியூஸ் போடுவதற்கு அதிகாரிகளை பிடிக்க முடியவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நீர்வள்ளூர் மின் வாரிய அலுவலகத்தில், சாலை, குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, மின் நுகர்வோர் இடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை