உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூட்டுறவு துறைக்கு ரூ.70 லட்சத்தில் புதிய கட்டடம்

கூட்டுறவு துறைக்கு ரூ.70 லட்சத்தில் புதிய கட்டடம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வையாவூர் சாலையில், கூட்டுறவு துறையின் மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கான கிடங்கும் அங்கேயே உள்ளது.தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், சொந்த கட்டடம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய கட்டடம் கட்ட தேவையான 70 லட்ச ரூபாய் நிதியை கூட்டுறவு துறை ஒதுக்கியுள்ளது.இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. வையாவூர் சாலையிலேயே, கூட்டுறவு துறைக்கு 4 ஏக்கர் பரப்பளவிலான இடம் இருப்பதால், அதில், 2,000 சதுரடி பரப்பளவில், புதிய கட்டடம்கட்ட திட்டமிட்டு உள்ளனர்.மேலும், அருகில் உள்ள கூட்டுறவு மருந்தகத்தையும் புதிய கட்டடத்தில் இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி