உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாலாஜாபாத் ஒன்றியத்தில் நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு

 வாலாஜாபாத் ஒன்றியத்தில் நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய கிராம ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கி வாய்ப்பளிக்க தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளில் தலா, ஒரு உறுப்பினர் பதவிகளில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சிக்கு ஒரு வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சிகளிலும், வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். இதேபோன்று, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறனாளிக்கான நியமன ஒன்றிய கவுன்சிலராக, ஊத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் மற்றும் வாலாஜாபாத் பி.டி.ஓ., கோமளா முன்னிலையில் நியமன ஆணை வழங்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை