உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அலையில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி

அலையில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி

கானத்துார் : ●பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் மகன் ராஜா, 25; ஐ.டி., ஊழியர். நேற்று அதிகாலை, இ.சி.ஆர்., அக்கரை கடலில், நண்பர்களுடன் குளித்தார். அப்போது, அலையில் சிக்கி பலியானார்.●விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தாமோதரன், 26. 'டிசைனர்' படிப்பு படித்து வருகிறார். நேற்று, அக்கரை கடலில் குளித்த போது, அலையில் சிக்கி கடலில் மாயமானார். இவரை, தீயணைப்பு மற்றும் மீட்டு படையினர் தேடி வருகின்றனர்.●ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் மகன் ஹரிஹரன், 26. இவரும், நேற்று காலை, அக்கரை கடலில் குளித்த போது அலையில் சிக்கி உயிருக்கு போராடினார்.மீனவர்கள் உதவியுடன், மீட்பு படையினர் இவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.மூன்று சம்பவங்கள் தொடர்பாக, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ