மேலும் செய்திகள்
கோவில் அருகே ஆண் சடலம் மீட்பு
08-Jan-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் --- சிங்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், எறையூர் சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள வல்லக்கோட்டை மயானத்தில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்த நபர் வல்லக்கோட்டை மொளகரம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து, 44 என்பதும், அதே பகுதியில் உள்ள சமாதியை சுத்தம் செய்த போது, வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
08-Jan-2025