காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டாக்டர் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டன.கட்டட பணிகள் முடிந்து, புத்தகங்கள் கொள்முதல், கணினி, இணையதளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, நேற்று காலை அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சியில், 24வது வார்டில், 90 லட்சம் ரூபாயில், ராஜாஜி சந்தையில் சிறப்பு தங்குமிட கட்டுமான பணிகள், சம்பந்தமூர்த்தி நகர் பூங்கா மேம்படுத்தும் பணி.விஷ்ணு காஞ்சி நகர்ப்புற சுகாதார மையத்தில் ஆய்வுக்கூட கட்டுமான பணி, முருகன் குடியிருப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் போன்ற பணிகளையும், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.