உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ரேஷன் கடை திறப்பு

காஞ்சியில் ரேஷன் கடை திறப்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, தாமல்வார் தெருவில், புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.எல்.ஏ., எழிலரசன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 13.50 லட்சம் ரூபாயும், ரேஷன் கடை அமைக்க 18.10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்தார்.இந்நிதியில் புதிதாக இரு கட்டடங்களும் கட்டுமானப் பணி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், திறப்பு விழா நடத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்தது.எனவே, காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து தாமல்வார் தெருவில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் திறந்து வைத்து, ரேஷன் கடையில் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, சின்ன காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி பள்ளியில், 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடம், 7 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமையல் அறை கட்டடத்தையும் திமு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை