மேலும் செய்திகள்
பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
27-Oct-2025
மழை கால மின் விபத்தை தவிர்க்க வழிமுறைகள்
27-Oct-2025
புயல் எதிரொலி 2 விரைவு ரயில்கள் இன்று ரத்து
27-Oct-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 143 மின் இணைப்புகளுக்கு, 5.49 கோடி ரூபாய் மின் கட்டணத்தை சில ஊராட்சி நிர்வாகங்கள் செலுத்தி அசத்தியுள்ளன. நிலுவைத்தொகை செலுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் வட்டாரங்களில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சிகளில், தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு மின் வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளன.பெரும்பாலான ஊராட்சி கட்டடங்கள், தெரு விளக்குகள், குடிநீர் இணைப்புகளுக்கு ஊராட்சி நிர்வாகம் மின் அளவீடு செய்த, 15 நாட்களில் மின் கட்டணங்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகம் செலுத்துவதில்லை. மாறாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டிற்கு ஒரு முறை என, ஊரக வளர்ச்சி துறையினர் பணம் அனுப்பும் போது, வட்டி கட்டணத்துடன் ஊராட்சி நிர்வாகங்களின் மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இருப்பினும், ஒரு முறை தீர்வாக மின் கட்டண தொகையை செலுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு மின் வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.இதை ஏற்று, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், 99 மின் இணைப்புகள் மற்றும் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில், 44 இணைப்புகளுக்கு, 5.49 கோடி ரூபாய் முழு தொகையாக ஒரே முறையில் செலுத்தப்பட்டு உள்ளது.மீதம் இருக்கும், 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, மின் வாரிய அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறையினருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.இதுதவிர, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு ஆகிய பகுதிகளில், 294 மனுக்கள் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.புதிதாக மனு அளிக்கப்பட்ட இடங்களுக்கு, உள்ளாட்சி நிர்வாகங்களின் அனுமதியுடன் விரைவில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஒருங்கிணைப்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், ஒரே தவனையில், நிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டியும், பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை துண்டிக்கவும், தெரு விளக்கு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 143 மின் இணைப்புகளுக்கு, 5.49 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. மீதம், 13 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.இதை, மாநில நிதிக்குழு மானியம் மற்றும் பிற நிதியினங்களில் செலுத்த வேண்டும் என, ஊராட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை துண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின் கட்டணம் செலுத்திய பின், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
27-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025