உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆக்கிரமிப்பால் வழிப்போக்கர் மண்டபம்

ஆக்கிரமிப்பால் வழிப்போக்கர் மண்டபம்

காஞ்சிபுரம், :காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நான்குவழிச் சாலையில், தாங்கி கூட்டு சாலை அருகே, வழிப்போக்கர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில், அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் சிற்பங்கள் உள்ளன.இதனால், தொல்லியல் துறையினர் கம்பி வேலி அமைத்து, பாதுகாப்பு வருகின்றனர். பொதுவாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில், மண்டபங்கள் மற்றும் நினைவிடங்களில், 100 மீட்டருக்கு எவ்வித கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என, கட்டுப்பாடுகள் உள்ளன.இதுபோல இருந்தும், சிலர், தாங்கி கூட்டு சாலை அருகே இருக்கும் வழிபோக்கர் மண்டபம் அருகே, தள்ளுவண்டிக்கடைக்கு ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளனர். இது, நிரந்தரமான ஆக்கிரமிப்பாக மாறிவிடக்கூடாது.மேலும், வழிப்போக்கர் மண்டபம் என தெரியாத அளவிற்கு உள்ளது. இதை சம்பந்தப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.மேலும், பொது மக்கள் பார்வையில் படும்படி வழிபோக்கர் மண்டபம் சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை