| ADDED : டிச 27, 2025 05:36 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருவதால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன. குப்பையில் வீசப்படும் உணவுக்காக நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதால், மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளும், அவர் களது உறவினர்களும் நாய்க்கடிக்கு ஆளாக நேரிடுமோ என, அச்சத்துடன் வந்து செல்கின்றனர். நாய்கள் கடித்தால், அதற்காக கூடுதலாக சிகிச்சை பெற வேண்டுமே என, நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் அனைத்து நாய்களையும் பிடித்து, அப்புறப்படுத்த மாநகராட்சியும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.