உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் மக்கள் உண்ணாவிரதம்

விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் மக்கள் உண்ணாவிரதம்

ஏகனாபுரம்:காஞ்சிபுரம் அடுத்த பரந்துாரில், இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குடியரசு தின விழாவை முன்னிட்டு, நேற்று ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணிப்பு செய்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், ஏகனாபுரம் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் விமான நிலையம் வேண்டாம் என, கோஷம் எழுப்பினர்.ஏகனாபுரம் கிராம மக்கள், பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, ஐந்தாவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ