மேலும் செய்திகள்
தேசிய பேரிடர் மீட்பு போட்டி சிறப்பு காவல் அணி முதலிடம்
8 minutes ago
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
18 minutes ago
பிரதான குழாயில் உடைப்பு சதாவரத்தில் வீணாகும் குடிநீர்
24 minutes ago
ஸ்ரீபெரும்புதுார்: மொளச்சூர் ஊராட்சியில், சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள, சத்யா நகர் சாலையை, வடிகால் வசதியுடன் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான சாலையாக சத்யா நகர் சாலை உள்ளது. தவிர, சந்தவேலுார் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டாள் நகர், மகாலட்சுமி நகர், கங்கா கார்டன், குருவிகார மேடு உள்ளிட்ட பகுதி மக்கள், இந்த சாலையே பயன்படுத்தி சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் தற்போது, பள்ளங்கள் நிறைந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களுக்கிடையே வளைந்து வளைந்து சென்று வருகின்றனர். அதேபோல, சாலையோரம் வடிகால் வசதி இல்லாததால், சத்யா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில்கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, சத்யா நகர் சாலையில், வடிகால் வசதி ஏற்படுத்தி, புதிதாக சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
8 minutes ago
18 minutes ago
24 minutes ago