உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் - வண்டலுார் இடையே ரயில் தடம் அமைக்க மேலாளருக்கு மனு

வாலாஜாபாத் - வண்டலுார் இடையே ரயில் தடம் அமைக்க மேலாளருக்கு மனு

காஞ்சிபுரம்:'வாலாஜாபாத் - வண்டலுார் இடையே, ரயில் வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளருக்கு, ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து, பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் லெனின்குமார் அளித்த மனுவில் கூறியதாவது:அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில், வாலாஜாபாத் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இருந்து, வாலாஜாபாத், பூசிவாக்கம், ஊத்துக்காடு, தேவரியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, நாயக்கன்பேட்டை, திம்மராஜம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கானோர் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதுபோன்ற ரயில் பயணியர், 3:00 மணி நேரம் பயணம் செய்து, சென்னை சென்றடைய வேண்டி உள்ளது.அதுவே, வாலாஜாபாத் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாநகரம் மற்றும் புறநகர் பேருந்துகளில் தாம்பரம் வழியாக சென்னைக்கு சென்றால், ஒன்றரை மணி நேரத்தில் சென்று விட முடிகிறது.ஆகையால், வாலாஜாபாத் - வண்டலுார் இடையே, புதிய ரயில் வழித்தடம் மற்றும் பூசிவாக்கம் கிராமத்தில், ரயில் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ