/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை அள்ள டிராக்டர், ஆட்டோக்கள் வாங்க திட்டம்: காஞ்சி மாநகராட்சி கமிஷனர் தகவல்
குப்பை அள்ள டிராக்டர், ஆட்டோக்கள் வாங்க திட்டம்: காஞ்சி மாநகராட்சி கமிஷனர் தகவல்
காஞ்சிபுரம்: குப்பை அகற்றும் பணி சரிவர நடக்காததால், ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்க, நான்கு டிராக்டர், நான்கு ஆட்டோக்கள் வாங்க இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ் உள்ள 51 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை, தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குப்பை அகற்றும் பணி சரிவர நடக்கவில்லை என, கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். தனியார் நிறுவனத்திடம் போதிய வாகனங்கள் இல்லாததாலேயே குப்பையை அகற்றும் பணி சரிவர நடப்பதில்லை என தெரிய வந்துள்ளது. இதனால், மாநகராட்சி நிர்வாகம், கூடுதலாக வாகனங்களை வாங்கி, குப்பை அகற்றுவதற்கு பயன்படுத்த போவதாக கமிஷனர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.