உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநகராட்சி மீன் அங்காடி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

மாநகராட்சி மீன் அங்காடி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், ராஜாஜி காய்கறி மார்க்கெட் அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது.இக்கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மீன் அங்காடி கட்டடத்தின் சுவரில் அரச மரச்செடி வளர்ந்து வருகிறது.இச்செடியின் வேர்கள் வேரூன்றி வளர்வதால் நாளடைவில் சுவரில் விரிசல் ஏற்படுவதோடு, மீன் அங்காடி கட்டடமும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.எனவே, மீன் அங்காடி சுவரில் வளரும் அரச மரச்செடியை வேருடன் அழிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி