உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாயமான பெண்ணை 3 மாதமாக தேடும் போலீஸ்

மாயமான பெண்ணை 3 மாதமாக தேடும் போலீஸ்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மலையாள தெருவைச் சேர்ந்தவர் சரவணன். எண்ணெய்க்கார தெருவில் அச்சுக்கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைமணி, 30. இவர், கடந்தாண்டு அக்டோபர் 29ல், தோழியை பார்ப்பதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.கணவர், மகன் உட்பட உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கும் கிடைக்காததால், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் பல்வேறு இடங்களில், மூன்று மாதங்களாக தேடியும் கலைமணி கிடைக்கவில்லை என, விஷ்ணுகாஞ்சி போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி