உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழை நீரோடு குப்பை மாங்காட்டில் சீர்கேடு

மழை நீரோடு குப்பை மாங்காட்டில் சீர்கேடு

குன்றத்துார்:மாங்காடு நகராட்சி, சீனிவாசபுரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நகருக்கு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள காலி நிலத்தில், ஒரு மாதமாக மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வடியாமல் உள்ளது. மேலும், அங்கு குப்பை கொட்டி நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சீனிவாசபுரம் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு மழைநீர் வடிகால்வாய் அமைத்து குப்பையை தினமும் அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ