மேலும் செய்திகள்
படைவீரர் குறைதீர் கூட்டம்
06-Dec-2024
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், முன்னாள் படை வீரர் கொடிநாள் நிகழ்ச்சி, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், போர் மற்றும் போர் நடவடிக்கைகளில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்கள், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு, கலெக்டர் பொன்னடை போர்த்தி, பரிசு வழங்கினார்.மேலும், முன்னாள் படைவீரர் கொடி நாள் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு, கவர்னரின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, படைவீரர் கொடிநாள் நிதி வழங்கி துவக்கி வைத்தார்.கொடிநாள் கையேட்டையும் கலெக்டர் வெளியிட்டார். இததைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக கண் கண்ணாடிகளும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப் - கலெக்டர் ஆஷிக் அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, லெப்.கர்னல் (ஓய்வு) முஷீர் அகமது ஹிடேரி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சீனிவாசன், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
06-Dec-2024