பிரேக் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரெய்டு
காஞ்சிபுரம்:மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக லோகநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு, காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு சரவணா நகரில் உள்ளது. நேற்று லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் கீதா தலைமையில், லோகநாதன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனை முடிவில், கணக்கில் வராத 84,000 ரூபாய் மற்றும் தனியார் வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.