உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்டவாளத்தில் சரக்கு லாரி பழுதுரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

தண்டவாளத்தில் சரக்கு லாரி பழுதுரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

மதுராந்தகம்:அச்சிறுப்பாக்கத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற சரக்கு லாரி பழுதடைந்து நின்றது. இதனால், ஒன்றரை மணி நேரம் பாசஞ்சர் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.அச்சிறுப்பாக்கத்தில் நேற்று காலை 6 மணிக்கு, சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி, வெங்கடேசபுரம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, திடீரென பழுதடைந்த லாரி, தண்டவாளத்திலேயே நின்று விட்டது.இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த பாசஞ்சர் ரயில், அச்சிறுப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டது. இதேபோல், மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள், வழியிலேயே நிறுத்தப்பட்டன.பழுதடைந்து நின்ற லாரியை உடனடியாக அகற்ற முடியவில்லை. அச்சிறுப்பாக்கம் போலீசார் மற்றும் பொதுமக்கள் லாரியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, 7.30 மணிக்கு லாரி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை